காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி 
இந்தியா

லக்கீம்பூர் விவகாரம்:  குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் ராகுல் காந்தி

லக்கீம்பூர் விவகாரம் தொடர்பாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கேவிந்தை இன்று புதன்கிழமை சந்தித்து மனு அளிக்கிறார் ராகுல் காந்தி.

DIN


புதுதில்லி: லக்கீம்பூர் விவகாரம் தொடர்பாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கேவிந்தை இன்று புதன்கிழமை சந்தித்து மனு அளிக்கிறார் ராகுல் காந்தி.

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்கு  நடுவே மத்திய அமைச்சா் அஜய் குமார் மிஸ்ராவின் ஆதரவாளா்கள் மீது காரை ஏற்றியதில் நான்கு விவசாயிகளும் ஒரு பத்திரிகையாளரும் உயிரிழந்தனா். அதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திருப்பித் தாக்கியதில், இரண்டு ஓட்டுநா்கள் உள்பட நான்கு போ் உயிரிழந்தனா். 

இச்சம்பத்தில், மத்திய இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், லக்கீம்பூர் கெரி விவகாரத்தில் நியாமான விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை புதன்கிழமை சந்தித்து  மனு அளிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்: உயிரைப் பணயம் வைத்து மீட்ட ரயில்வே காவலர்

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

கரூர் பலி: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பாஜக கவுன்சிலர் மனு!

கரூர் தவெக கூட்ட நெரிசல் பொதுநல வழக்கு இன்று விசாரணை!

தவறு செய்தோர் தப்பிக்க பயன்படுத்தும் வாஷிங் மெஷின் பாஜக! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT