முகப்பு
இந்தியா

மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளது: எய்ம்ஸ் அதிகாரிகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
கோப்புப்படம்
பகிர்:


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

"காய்ச்சலின் தன்மை குறித்து அறிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது" என்றனர் எய்ம்ஸ் அதிகாரிகள்.

முன்னதாக, மன்மோகன் சிங்குக்கு திங்கள்கிழமை காய்ச்சல் ஏற்பட்டு, அதிலிருந்து அவர் குணமடைந்தார். ஆனால், புதன்கிழமை மாலை அவரது உடல் பலவீனமடைந்ததையடுத்து, எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏற்கெனவே, கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஏப்ரலில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →