தில்லியில் புதிதாக 28 பேருக்கு கரோனா
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 28 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,39,311 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | கேரளத்தில் புதிதாக 9,246 பேருக்கு கரோனா
கடந்த 24 மணி நேரத்தில் 61,012 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.05 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
மேலும் 29 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
இதுவரை மொத்தம் 14,13,885 பேர் குணமடைந்துவிட்டனர். மொத்த பலி எண்ணிக்கை 25,089 ஆக உள்ளது.
இன்றைய நிலவரப்படி 337 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.