கோப்புப்படம் 
இந்தியா

2024ல் ராவணன் முழுமையாக எரிக்கப்படுவார்: சிவசேனை

வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனை கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரெளத் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

DIN

பெட்ரோல், டீசல் வடிவத்தில் உள்ள ராவணனை எரிக்கும் செயல்முறை (தசரா) நாளை முதல் தொடங்கப்படும் என சிவசேனை கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2024ஆம் ஆண்டு, அந்த ராவணன் முழுமையாக எரிக்கப்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மத்தியில், இரண்டு நாள்களுக்கு பிறகு, வியாழக்கிழமை அன்று, பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்தப்பட்டது. குறிப்பாக, மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.34 பைசா உயர்த்தப்பட்டு 110.75 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 0.37 பைசா உயர்த்தப்பட்டு 101.4 ரூபாய்க்கு விற்கப்பட்டுவருகிறது. 

எண்ணெய் நிறுவனங்கள் கடந்த வாரம் ஆட்டோ எரிபொருள் விலையை உயர்த்தத் தொடங்கின. ஏழு நாள்களுக்கு விலை தொடர்ந்து உயர்த்தப்பட்ட நிலையில், அக்டோபர் 12,13 ஆகிய தேதிகளில் விலை ஏற்றப்படவில்லை. மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலும் மக்களவை தேர்தலும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT