முகப்பு
இந்தியா

கேரளத்தில் ஒரேநாளில் 7,555 பேருக்கு கரோனா

கேரளத்தில் ஒரேநாளில் 7,555 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:23 AM
பகிர்:

கேரளத்தில் ஒரேநாளில் 7,555 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 73,157 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 7,555 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
அதிகபட்சமாக திரசூரில் 998 பேரும், எர்ணாகுளத்தில் 975 பேரும், திருவனந்தபுரத்தில் 953 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,45,115 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 74 பேர் பலியானார்கள். 

இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 26,865 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 87,593 சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 10,773 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 47.39 லட்சமாக உயர்ந்துள்ளது. 
பல்வேறு மாவட்டங்களில் 3,11,361 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →