இந்தியா

சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதியில்லை: ஆட்சியர்

DIN

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், பக்தர்கள் வரவேண்டாம் என்று பத்தினம்திட்டா ஆட்சியர் திவ்யா கேட்டுக்கொண்டுள்ளார். 

இது தொடர்பாக மேலும் அவர் பேசியதாவது, தொடர் மழை பெய்து வருவதால், 85 முகாம்களில் 2,800 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வனப்பகுதிகளில் அதிக அளவு மழை பெய்வதால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. பம்பா நதியில் இரு கரைகளையும் தொட்டவாறு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மற்றும் உயர் மட்ட அதிகார்களுடன் ஆலோசனை நடத்தி அதன்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயில் திறக்கப்பட்டிருந்தாலும் மழை காரணமாக அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹார்திக் பாண்டியாவை விமர்சிக்க ஏபிடி வில்லியர்ஸுக்கு தகுதியில்லை: கம்பீர் காட்டம்!

மோடிக்கு விடைகொடுக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டனர்: மல்லிகார்ஜுன கார்கே

ரசிகையின் அன்பான கோரிக்கைக்கு கம்பீர் பதில்!

இது ஒரு பொன்மாலை பொழுது...!

காதலை மறுத்த இளம்பெண் குத்திக் கொலை!

SCROLL FOR NEXT