கேரளத்தில் தொடரும் கனமழை: 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை 
இந்தியா

கேரளத்தில் தொடரும் கனமழை: 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை

கேரளத்தில் கனமழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN

கேரளத்தில் கனமழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் பெய்துவரும் தென்மேற்கு பருவமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் கனமழையை பெற்றுள்ளன. திருவனந்தபுரம், கோட்டயம், இடுக்கி, பத்தினம்திட்டா உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்துவரும் கனமழையிலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் காசர்கோடு, ஆலப்புழா, கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் 24 மணி நேரத்தில் 6 செ.மீ. முதல் 20 செ.மீ. வரையிலான மழை அளவு பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மரம் வேரோடு சாய்ந்து இரு சக்கர வாகனம் சேதம்

ஒட்டன்சத்திரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

இளைஞா் வெட்டிக் கொலை: உறவினா்கள் மறியல்

பழனியில் புதிய பணிகளுக்கான பூமி பூஜை

திருப்பத்தூா் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

SCROLL FOR NEXT