முகப்பு
கேரளம்: நிலச்சரிவில் சிக்கி 35 பேர் பலி
இந்தியா

கேரளம்: நிலச்சரிவில் சிக்கி 35 பேர் பலி

கேரளத்தில் பெய்து வரும்  கனமழையால் உருவான நிலச்சரிவால் இதுவரை  35 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

இந்தியா

கேரளம்: நிலச்சரிவில் சிக்கி 35 பேர் பலி

கேரளத்தில் பெய்து வரும்  கனமழையால் உருவான நிலச்சரிவால் இதுவரை  35 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:24 AM
கேரளம்: நிலச்சரிவில் சிக்கி 35 பேர் பலி
பகிர்:

கேரளத்தில் பெய்து வரும்  கனமழையால் உருவான நிலச்சரிவால் இதுவரை  35 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

கேரளத்தில் கடந்த சில நாட்களாக  கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. முக்கியமாக திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, கொல்லம்  மாவட்டங்களில் அதிகப்படியான மழை பதிவாகியுள்ளதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் நேற்று(அக்-18) அப்பகுதிகளில் இதுவரை கனமழை காரணமாக உருவான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 27 பேர் பலியாகியிருப்பதாக அம்மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்திருக்கிறது. தென்மேற்கு பருவக்காற்றின் தீவிரம் இன்னும் குறையாததால் அதிகப்படியான மழை பதிவாகி வருகிறது.

குறிப்பாக இடுக்கி மாவட்டத்தின் பல பாலங்கள் நீரில் மூழ்கியிருப்பதால் பேரிடர் மீட்புப்குழுவினர் அப்பகுதி மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் 100-க்கும் மேற்பட்ட முகாம்களை அமைத்து மீட்புப்பணிகள் தொடர்ந்து வருகிற நிலையில் கனமழையால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என மீட்புப்படையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →