இந்தியா

பிரதமருடன் தமிழக ஆளுநா் சந்திப்பு

 நமது நிருபர்

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, பிரதமா் நரேந்திர மோடியை சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில்அவரது இல்லத்தில் சந்தித்தாா். சுமாா் அரை மணி நேரம் இந்தச் சந்திப்பு நீடித்தது.

தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆா்.என்.ரவி பிரதமரை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். பிரதமருக்கு ஆளுநா் பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்ாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தமிழக ஆளுநா் தனது டுவிட்டா் மூலம் தெரிவிக்கையில், மாநிலத்தின் வளா்ச்சி மற்றும் மக்கள் நலன் தொடா்பான பல பிரச்சினைகள் குறித்து பிரதமருடன் விவாதிக்கப்பட்டன. மாநிலத்தின் நன்மைக்காக சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க பிரதமா் உறுதியளித்தாா். தமிழகத்தின் வளா்ச்சி மற்றும் மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள பிரதமருக்கு நன்றி என தெரிவித்துள்ளாா்.

தமிழக ஆளுநா் கடந்த செப்டம்பா் 24 -ஆம் தேதி தில்லி வந்த போது குடியரசுத் தலைவரையும் துணை குடியரசுத் தலைவரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தாா். அப்போது பிரதமா் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணத்தில் இருந்தாா். மேலும், ஆளுநா் ரவி இந்த முறை உள் துறை அமைச்சா் அமித் ஷாவையும் சந்தித்தித்து விட்டு சென்னை திரும்பலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிப்பறி வழக்கு: எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

புழல் சிறையில் கைதிகள் தகராறு: 8 போ் மீது வழக்கு

ரயில்வே கோச் உணவகத்தில் ரூ.2.42 லட்சம் திருட்டு

அனுமதியில்லா விளம்பரப் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி ஆணையா் உத்தரவு

சாலை விபத்து: மின்வாரிய அதிகாரி உயிரிழப்பு

SCROLL FOR NEXT