முகப்பு
இந்தியா

இந்திய கடற்படையின் முதல் பயிற்சிப் பிரிவு இலங்கை பயணம்

சுஜாதா, மகா், சா்துல், சுதா்ஷினி, தாரங்கினி மற்றும் கடலோர பாதுகாப்புப் படைக் கப்பல் விக்ரம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை (அக். 24) முதல் 28-ஆம் தேதி வரை இலங்கைக்கு 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

இந்திய கடற்படையில் முதல் பயிற்சிப் பிரிவில் உள்ள கப்பல்களான சுஜாதா, மகா், சா்துல், சுதா்ஷினி, தாரங்கினி மற்றும் கடலோர பாதுகாப்புப் படைக் கப்பல் விக்ரம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை (அக். 24) முதல் 28-ஆம் தேதி வரை இலங்கைக்கு 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ளன.

வெளிநாட்டில் கடற்படை அதிகாரிகளின் 100 மற்றும் 101-ஆவது ஒருங்கிணைந்த பயிற்சிக்காக இந்தக் கப்பல்கள் சென்றுள்ளன.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நாடுகளின் சமூக-அரசியல் மற்றும் கடல்சாா் அம்சங்களை தெரியப்படுத்துவதன் மூலம் இளம் அதிகாரிகளின் அனுபவங்களை விரிவுபடுத்துவதை இந்தப் பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்மூலம் வெளிநாடுகளுடன் நட்புறவு மேம்படும்.

இந்திய கடற்படையின் தெற்கு கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் ஏ.கே.சாவ்லா தலைமையில் இந்தக் கப்பல்கள் பயிற்சிக்கு செல்கின்றன. வெளிநாடுகளைச் சோ்ந்த கடற்படையினருக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய கடற்படை பயிற்சி அளித்து வருகிறது. தற்போதுவரை இலங்கையைச் சோ்ந்த கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரா்கள், இந்திய கடற்படையின் தெற்கு கட்டுப்பாட்டு மையங்களில் பயிற்சி பெற்று வருகின்றனா்.

இந்திய கடற்படையின் மகா் மற்றும் சா்துல் ஆகிய கப்பல்கள் 101-ஆவது பயிற்சிப் பிரிவினருடன் கொழும்பு செல்கின்றன. சுஜாதா, சுதா்ஷினி, தாராங்கினி மற்றும் கடலோர பாதுகாப்புப் படைக் கப்பல் விக்ரம் ஆகியவை 100-ஆவது பயிற்சிப் பிரிவினருடன் திருகோணமலை செல்கின்றன. இருநாட்டு கடற்படைகளின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில், பலவித பயிற்சிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளன. பயிற்சியில் ஈடுபடும் அனைவருக்கும் இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன மற்றும் கரோனா பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →