இமாச்சல்: மலையேற்றத்தில் ஈடுபட்ட 3 பேர் பலி , 10 பேர் மீட்பு
இமாச்சலில் மலையேற்றத்தின் போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
இமாச்சலில் மலையேற்றத்தின் போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
இமாச்சல் பிரதேசம் மாநிலம் கின்னூர் மாவட்டத்தில் 13 பேர் கொண்ட குழு மலையேறத்தில் ஈடுபட்டனர். கடல்மட்டத்திலிருந்து 15,000 அடி உச்சியில் சென்று கொண்டிருந்த போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
இதில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும் உடன் சென்ற 10 பேர் மீட்கப்பட்டதாகவும் இந்தோ-திபெத் எல்லைக் காவலர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
Advertisement
Advertisement
மேலும் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.