ரூ.3 கோடி வருமான வரி செலுத்த உ.பி. ரிக்‎ஷா ஓட்டுநருக்கு நோட்டீஸ் 
இந்தியா

ரூ.3 கோடி வருமான வரி செலுத்த உ.பி. ரிக்‎ஷா ஓட்டுநருக்கு நோட்டீஸ்

சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி செலுத்துமாறு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பது குறித்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரிக்‎ஷா ஓட்டுநர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

DIN


மதுரா: சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி செலுத்துமாறு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பது குறித்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரிக்‎ஷா ஓட்டுநர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பிரதாப் சிங், பகல்பூர் பகுதியில் அமர் காலனியில் வசித்து வருகிறார். இவர் காவல்நிலையத்தில் அளித்திருக்குக்கும் புகார் மனுவில், தான் ஒரு மோசடியாளர் என்று கூறி, வருமான வரித்துறை அனுப்பியிருக்கும் நோட்டீஸ் குறித்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை, ஆனால், பிரதாப் சிங் கூறியிருக்கும் புகார் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வங்கியிலிருந்து பான் அட்டை கேட்டதால், கடந்த மார்ச் மாதம் தான் பான் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளார். பிறகு, உண்மையான பான் அட்டைக்குப் பதிலாக வண்ண நிற நகல்தான் கிடைத்துள்ளது. இவருக்கு படிப்பறிவு இல்லாததால், இது நகல் என்பது தெரியாமல் போய்விட்டது. 

இந்த நிலையில் அக்டோபர் 19ஆம் தேதி தனக்கு வருமான வரித்துறையிடமிருந்து அழைப்பு வந்ததாகவும், அவர்கள் ரூ.3,47,54,896 ஐ வருமான வரி செலுத்துமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், இவரது பான் அட்டையைப் பயன்படுத்தி யாரோ ஒருவர் ஜிஎஸ்டி எண் பெற்ற வியாபாரம் செய்து வருவதாகவும், அதன் மூலம் அவர்கள் 2018 - 19ல் ரூ.43,44,36,201 வணிகம் செய்திருப்பதகாவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத நபர்கள் மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யுமாறு காவல்நிலையத்துக்கு வருமான வரித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெஸ்ஸி நிகழ்ச்சியில் ரசிகா்கள் வன்முறை: மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜிநாமா!

அன்கேப்டு வீரர்களை ரூ. 28 கோடிக்கு ஏலத்தில் எடுத்து வரலாறு படைத்த சிஎஸ்கே!

கடும் பனிமூட்டம்: சாலை விபத்துகளில் 25 பலி, 59 பேர் படுகாயம்

ரூ. 9 கோடிக்கு கேகேஆர் அணியில் இணைந்த முஸ்தஃபிசூர் ரஹ்மான்!

2025-ல் இந்திய எல்லைகளில் நடந்த ஊடுருவல், கைது எத்தனை?

SCROLL FOR NEXT