உத்தரப்பிரதேசத்தை அச்சுறுத்தும் ஸிகா வைரஸ் 
இந்தியா

உத்தரப்பிரதேசத்தை அச்சுறுத்தும் ஸிகா வைரஸ்

கடந்த வார இறுதியில் கான்பூரில் ஒருவருக்கு ஸிகா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, அம்மாநில அரசு ஸிகா வைரஸ் குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

IANS


லக்னௌ: கடந்த வார இறுதியில் கான்பூரில் ஒருவருக்கு ஸிகா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, அம்மாநில அரசு ஸிகா வைரஸ் குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநர் வேத் விரத் சிங் வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையில், மாநிலத்தில் உள்ள அனைத்து சுகாதாரத் துறைத் தலைவர்களும், ஸிகா வைரஸ் குறித்து அறிந்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சந்தேகப்படுபவர்களை கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தினை தொடர்பு கொண்டு பரிசோதனை நடத்த வலியுறுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஏடியஸ் வகை கொசுக்கள் மூலம் இந்த ஸிகா வைரஸ் பரவுகிறது என்பதால், பொதுமக்களும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வகை கொசுக்கள்தான் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களுக்கும் காரணமாக விளங்கின.

ஸிகா வைரஸ் தாக்கினால், காய்ச்சல் மற்றும் குளிர், மூட்டு வலி, தோல் பாதிப்பு, சிவந்த கண்கள் போன்றவை அறிகுறிகளாக உள்ளன. ஸிகா வைரஸ் கர்ப்பிணியை தாக்கினால், வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT