நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2020ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் கரோனா தொற்று பரவல் காரணமாக நடைபெறவில்லை. நாட்டில் தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வந்ததன் காரணமாக பட்ஜெட் மற்றும் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் நாள்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
இந்நிலையில் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 வரை குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.