முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு: 2-ம் கட்ட எச்சரிக்கை
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக பொதுப்பணித்துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:58 AM
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக பொதுப்பணித்துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை தாண்டியுள்ளது. இதையடுத்து இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் மூலம் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக பொதுப்பணித்துறை அனுப்பியுள்ளது.
மேலும், அணையின் நீர்மட்டம் 140 அடியை தாண்டும்போது மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். 142 அடியை தாண்டினால் அணையின் 13 மதகுகளிலிருந்து உபரிநீர் திறந்துவிடப்படும்.
Advertisement