முகப்பு
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்தியா

அவரு 24 கேரட் தங்கமுங்க: மோடியை புகழ்ந்து தள்ளிய ராஜ்நாத்

குஜராத்தை முழுமையான வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அனைத்து பிரிவு மக்களின் முன்னேறத்திற்காகவும் அவர் பணியாற்றியுள்ளார் என்றும் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியா

அவரு 24 கேரட் தங்கமுங்க: மோடியை புகழ்ந்து தள்ளிய ராஜ்நாத்

குஜராத்தை முழுமையான வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அனைத்து பிரிவு மக்களின் முன்னேறத்திற்காகவும் அவர் பணியாற்றியுள்ளார் என்றும் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
பகிர்:

கடந்த 20 ஆண்டுகாலமாக அரசின் தலைவராக பொறுப்பு வகித்த பிரதமர் மோடியின் அரசியல் பயணத்தை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். சிறந்த தலைமை சிறந்த நிர்வாகம் என்ற அடிப்படையில் அவரின் அரசியல் பயணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

'டெலிவேரிங் டெமோகிரேசி: ரிவியூவிங் டூ டிக்கெட்ஸ் ஆப் நரேந்திர மோடி ஏஸ் ஹேட் ஆப் தி கோவேர்ந்மேன்ட்' என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய ராஜ்நாத், "ஒரு உண்மையான தலைவர் அவரின் உள்நோக்கம் மற்றும் நேர்மையால் அடையாளம் காணப்படுகிறார். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், மோடி 24 காரட் தங்கமாக திகழ்கிறார். 20 ஆண்டு காலமாக அரசாங்கத்தின் தலைவராக இருந்தும் அவர் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை.

கடந்த 20 ஆண்டுகளில், அவரது அரசியல் பயணத்தைப் பார்த்தால், புதிய சவால்கள் தொடர்ந்து வருவதைக் காணலாம். ஆனால் அந்தச் சவால்களை அவர் எதிர்கொண்ட விதத்தை மேலாண்மைப் பள்ளிகளில் திறமையான தலைமைத்துவம் மற்றும் திறமையான நிர்வாகம் என்ற தலைப்பில் ஆய்வாகக் கற்பிக்கப்பட வேண்டும்.

குஜராத்தை முழுமையான வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி. அனைத்து பிரிவு மக்களின் முன்னேறத்திற்காகவும் அவர் பணியாற்றியுள்ளார். அனைவரின் ஒத்துழைப்பால் சாத்தியப்படும் அனைவருக்குமான வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தை வழங்கியவர் மோடி. இந்த தாரக மந்திரத்தின் மூலம் குஜராத்தில் புதிய அத்தியாயத்தை எழுதியவர் பிரதமர் மோடி.

குஜராத் முதல்வராக மோடி பொறுப்பு வகித்தபோது, பல்வேறு சீர்திருத்தங்கள், திட்டங்கள் ஆகியவை நிறைவேற்றப்பட்டன. மோடியின் சொல்லிலும் செயலிலும் எந்த வித்தாசமும் இல்லை" என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →