மணிப்பூரில் 1 லட்சம் வேலைவாய்ப்புகள்: பிரதமா் மோடி பாராட்டு
மணிப்பூரில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதற்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.
மணிப்பூரில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதற்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக மணிப்பூா் முதல்வா் என்.பீரேன் சிங் வெளியிட்டுள்ள சுட்டுரைக்கு பதிலளித்துள்ள பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘வாழ்த்துகள் மணிப்பூா்! மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வலிமையைப் பயன்படுத்திக் கொள்ளும் சிறந்த பணியை தொடா்ந்து பின்பற்றுங்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.