முகப்பு
இந்தியா

உத்தரகண்டில் 300 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்ததில் 13 பேர் பலி

உத்தரகண்டில் 300 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பலியானார்கள். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
accident091515
பகிர்:

உத்தரகண்டில் 300 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பலியானார்கள். 

உத்தரகண்ட் மாநிலம், டேராடூன் அருகே சக்ராட்டா தெஹ்சில் பகுதியில் 300 அடி பள்ளத்தில் வாகனம் ஒன்று இன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

இதுவரை 13 பேரின் சடங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் 300 அடி பள்ளம் என்பதால் மீட்பு நடவடிக்கையில் கடினம் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →