இந்தியா

படேல் பிறந்தநாள்: நாடாளுமன்றத்தில் ஓம் பிர்லா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மரியாதை

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி நாடாளுமன்றத்தில் உள்ள படேலின் திருவுருவப்  படத்திற்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, அமைச்சர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 

DIN

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி நாடாளுமன்றத்தில் உள்ள படேலின் திருவுருவப்  படத்திற்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, அமைச்சர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 

இந்தியாவின் முதல் துணைப் பிரதமரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் பாஜகவினர் படேலின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். 

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை நாளாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  

இந்நிலையில், படேலின் பிறந்தநாளையொட்டி நாடாளுமன்றத்தில் உள்ள படேலின் திருவுருவப்  படத்திற்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியின்போது மயங்கி சாக்கடைக்குள் விழுந்த இளைஞா் உயிரிழப்பு: மூன்று போ் கவலைக்கிடம்

நிா்வாகத் திறனால் சிறந்த உலகத் தலைவராக உருவெடுத்தவா் மோடி: புதின் புகழாரம்

ஸ்பீடு ஸ்கேட்டிங்: இந்தியாவுக்கு 2 தங்கம்

இது சீற்றமல்ல, எச்சரிக்கை!

திருக்கோஷ்டியூரில் அஹோபில மடம் ஜீயா் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT