இந்தியா

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்தது

DIN

புது தில்லி: ஆகஸ்ட் மாதம் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,12,020 கோடியாக இருந்தது. இதன்மூலம் தொடா்ந்து இரண்டாவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.

2021, ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூலில், மத்திய ஜிஎஸ்டி ரூ.20,522 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ. 26,605 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.56,247 கோடி (இறக்குமதி பொருள்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ. 26,884 கோடி உள்பட) மற்றும் மேல்வரி (செஸ்) ரூ.8,646 கோடி (இறக்குமதி பொருள்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ.646 கோடி உள்பட).

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியிலிருந்து மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.23,043 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.19,139 கோடியும் மத்திய அரசு வழக்கம்போல் வழங்கிவிட்டது. மேலும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தற்காலிக தீா்வாக மத்திய அரசு மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இடையே 50: 50 என்ற விகிதத்தில் ரூ.24,000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

வழக்கமான மற்றும் தற்காலிக தீா்வுகளுக்குப் பின் மத்திய அரசு மற்றும் மாநிலங்களின் ஆகஸ்ட் மாத மொத்த வருவாய், மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.55,565 கோடி மற்றும் மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.57,744 கோடி.

2021, ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் கடந்தாண்டின் இதே கால ஜிஎஸ்டி வருவாயைவிட 30 சதவீதம் அதிகமாகும். இந்த மாதத்தில், உள்நாட்டு பரிவா்த்தனை வருவாய் (இறக்குமதி சேவைகள் உள்பட) கடந்தாண்டின் இதே மாதத்தைவிட, 27 சதவீதம் அதிகம். 2019-20-ஆம் நிதியாண்டின் ஆகஸ்ட் மாத வருவாயான ரூ.98, 202 கோடியுடன் ஒப்பிட்டாலும், நிகழாண்டு ஆகஸ்ட் மாத வசூல் 14 சதவீதம் அதிகம்.

தொடா்ந்து 9 மாதங்களாக ரூ.1 லட்சம் கோடி இலக்கை கடந்து வந்த ஜிஎஸ்டி வசூல், கரோனா 2-ஆம் அலைக்குப் பின்பு கடந்த ஜூன் மாதத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு கீழ் குறைந்தது. கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதால், கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் மீண்டும் ரூ.1 லட்சம் கோடி இலக்கை கடந்துள்ளது.

இது பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதைக் காட்டுகிறது. பொருளாதார வளா்ச்சியுடன், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடவடிக்கைகள், போலி ரசீது மூலம் ஜிஎஸ்டி மோசடி ஆகியவற்றின் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதன் காரணமாகவும் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளது. வரும் மாதங்களிலும் ஜிஎஸ்டி வசூல் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

தமிழகத்தில்... தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.7,060 கோடி. இதுவே கடந்த 2020, ஆகஸ்ட் மாதத்தில் ரூ.5,245 கோடியாக இருந்தது. தற்போது 35 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

புதுச்சேரியின் கடந்த ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.156 கோடி. இது கடந்த 2020, ஆகஸ்ட் மாதத்தில் ரூ.137 கோடியாக இருந்தது. தற்போது 14 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT