இந்தியா

ரஷியாவில் 17 நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி: இந்தியா பங்கேற்பு

DIN

புதுதில்லி: ரஷியாவில் 17 நாடுகள் இணைந்து மேற்கொள்ளவுள்ள கூட்டு ராணுவப் பயிற்சியில் இந்தியா பங்கேற்கவுள்ளது.

ரஷியாவில் உள்ள நீஸ்நி நகரில் செப்டம்பா் 3 முதல் 16-ஆம் தேதி வரை ‘சபாட்’ கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சியில் இந்தியா, ரஷியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மியான்மா், மலேசியா, மங்கோலியா, ஆா்மீனியா, சொ்பியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கவுள்ளன.

இந்தப் பயிற்சியில் பங்கேற்பது குறித்து இந்திய ராணுவ அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘ரஷிய பாதுகாப்புப் படைகளால் நடத்தப்படும் ‘சபாட்’ கூட்டுப் பயிற்சியில் இந்திய ராணுவ வீரா்கள் சுமாா் 200 போ் பங்கேற்கவுள்ளனா். அவா்களில் பெரும்பாலானோா் நாகா படைப்பிரிவைச் சோ்ந்தவா்கள். இந்தப் பயிற்சி பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும். இதில் பங்கேற்கும் நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவையும், அவை ஒன்றிணைந்து செயல்படுவதையும் மேம்படுத்துவதுதான் இந்தப் பயிற்சியின் நோக்கம்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT