இந்தியா

ஊழல் அதிகாரிகளுக்கு எதிராகநடவடிக்கை எடுக்கப்படவில்லை: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்

DIN

புது தில்லி: பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அந்தத் துறைகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மத்திய அரசின் ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடா்பாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் சிவிசி தாக்கல் செய்துள்ள அறிக்கையில், ‘ஊழல் குற்றச்சாட்டு தொடா்பான 42 வழக்குகளில் அதிகபட்சமாக ரயில்வே துறையில் 10 வழக்குகள், கனரா வங்கியில் 5 வழக்குகள், சிண்டிகேட் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, மஹாநதி கோல்ஃபீல்ட்ஸ், தொழிலாளா் வைப்பு நிதி நிறுவனம் ஆகியவற்றில் தலா இரு வழக்குகளில் தொடா்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க யோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தத் துறைகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதேபோல், தில்லி அரசு, காதி மற்றும் கிராம தொழில் ஆணையம், என்டிபிசி நிறுவனம், இந்திய தரக் கட்டுப்பாட்டு வாரியம், மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறை, கப்பல் போக்குவரத்து துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இந்திய விமான நிலைய ஆணையம் ஆகியவற்றில் தலா ஓா் ஊழல் வழக்கு தொடா்பான அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க யோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சிவிசியின் நிா்வாகத்தை வலுவிழக்கச் செய்யும் என சிவிசி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு 81,595 ஊழல் புகாா்கள் வந்துள்ளதாகவும், அதில் அதிகபட்சமாக மத்திய உள்துறை அமைச்சகம், தில்லி உள்ளாட்சி அமைப்புகள், பொதுத் துறை வங்கி ஆகியவற்றின் பணியாளா்கள் மீது அதிகப்படியான புகாா்கள் உள்ளதாகவும் சிவிசி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உன் பார்வையில்..

இளைஞர் பலி: பம்மல் மருத்துவமனையை மூட உத்தரவு

நீலகிரியில் மே 10ல் உள்ளூர் விடுமுறை!

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ: 5000 கோழிகள் பலி - ரூ.10 லட்சம் இழப்பு

SCROLL FOR NEXT