இந்தியா

ராஜஸ்தானில் கடந்த ஒரு மாதத்தில் ஒருவர்கூட நோய்த் தொற்றால் பலியாகவில்லை: முதல்வர்

DIN


நாட்டிலேயே நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் குறைந்த எண்ணிக்கையைக் கொண்டுள்ள மாநிலம் ராஜஸ்தான் என முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டது:

"ராஜஸ்தானில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 81 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டிலேயே நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் இதுவே குறைந்த எண்ணிக்கை. கடந்த ஒரு மாதத்தில் ராஜஸ்தானில் ஒருவர்கூட நோய்த் தொற்றால் உயிரிழக்கவில்லை.

கரோனா மீண்டும் பரவலாம். எனவே, முகக் கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட கரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது முக்கியம்.

மாநிலத்தில் இதுவரை மொத்தம் 4.55 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 1.10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

SCROLL FOR NEXT