பிபிசியின் முதல் ஹிந்தி செய்தி வாசிப்பாளர் ரஜினி கௌல் காலமானார் 
இந்தியா

பிபிசியின் முதல் ஹிந்தி செய்தி வாசிப்பாளர் ரஜினி கௌல் காலமானார்

பிபிசியின் முதல் ஹிந்தி செய்தி வாசிப்பாளரான ரஜினி கௌல் நேற்று முன்தினம் (ஆக-31) தன்னுடைய 93வது வயதில் பாகிஸ்தானின் பரிதாபாத்தில் காலமானார்.

DIN

பிபிசியின் முதல் ஹிந்தி செய்தி வாசிப்பாளரான ரஜினி கௌல் நேற்று முன்தினம் (ஆக-31) தன்னுடைய 93-வது வயதில் பாகிஸ்தானின் பரிதாபாத்தில் காலமானார்.

பெஷாவரில் பிறந்த ரஜினி கௌல்  தில்லியில் ஆல் இந்தியா ரேடியோவிலும் பின் 'வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா' செய்தி நிறுவனத்திலும்  பணியாற்றிய பின் லண்டனில் உள்ள பிபிசி செய்தியின் தலைமை அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்தார். 

அதற்கடுத்து 1961 ஆம் ஆண்டு முதல்  பிபிசியில் ஹிந்தி மொழி செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இவரே பிபிசியின் முதல் ஹிந்தி செய்தி வாசிப்பாளர் ஆவார்.

பின் அதே அலுவலகத்தில் பணிபுரிந்த மஹிந்த்ரா கௌல் என்பவரை திருமணம் செய்துகொண்டு லண்டனில் வாழ்ந்து வந்தவர் தற்போது பாகிஸ்தானில் 93 வயதில் காலமாகியிருக்கிறார்.

ரஜினி கௌல் 60 ஆண்டுகாலம் பிபிசியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT