கோப்புப்படம் 
இந்தியா

கேரள பள்ளிகளில் செப்.6-ல் நேரடித் தேர்வுகள்: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

கேரளத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 6-ல் நேரடித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாநில அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ANI

கேரளத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 6-ல் நேரடித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாநில அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா குறைந்து வரும் நிலையில், கேரளத்தில் மட்டும் நாள்தோறும் 30,000க்கும் அதிமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கேரளத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 6ஆம் தேதி பள்ளிகளில் நேரடி தேர்வுகள் நடத்த மாநில அரசு அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில்,

கேரளத்தில் கரோனா பரவல் அதிகரிப்பால் அபாயகரமான சூழல் நிலவி வருகிறது. நாள்தோறும் 35,000 பேர் பாதிக்கப்படும் நிலையில் குழந்தைகளை ஆபத்தில் விடமுடியாது. 

ஆகையால், கேரள அரசின் அறிவிப்பிற்கு இடைக்கால தடைவிதித்து அடுத்த விசாரணையை செப்டம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT