இந்தியா

தில்லியில் புதிதாக 55 பேருக்கு கரோனா

DIN


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் தடுப்பூசி நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 70,303 பரிசோதனைகள் நடத்தப்பட்டதில் 55 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.08 சதவிகிதமாக உள்ளது.

மேலும் 63 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர்கூட நோய்த் தொற்றால் உயிரிழக்கவில்லை.

தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,37,929 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,12,493 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 25,082 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 354 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,41,693 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 1,39,11,640 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 99,22,366 பேர். இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தியவர்கள் 39,89,274 பேர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT