முகப்பு
இந்தியா

கேரளத்தில் மேலும் 19,688 பேருக்கு கரோனா

கேரளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 19,688 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
கேரளத்தில் மேலும் 19,688 பேருக்கு கரோனா
பகிர்:

கேரளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 19,688 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில் கேரள மாநிலத்தை மட்டும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.

இன்றைய பாதிப்பு குறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

கடந்த 24 மணிநேரத்தில் 1,17,823 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 19,688 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

அதிகபட்சமாக திரிச்சூரில் 3,120, எர்ணாகுளத்தில் 2,029, கோழிக்கோட்டில் 2,205 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 2,38,782 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 135 பலியானார்கள். 

இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 21,631ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 28,561 பேர் மீண்டனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 39,66,557 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →