இந்தியா

ஆப்கன் விவகாரம்: ரஷிய பாதுகாப்புகவுன்சில் செயலா் இந்தியா வருகை; பிரதமா் மோடியை சந்திக்கிறாா்

DIN

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து இந்தியாவுடன் ஆலோசிப்பதற்காக ரஷிய பாதுகாப்பு கவுன்சில் செயலா் நிகோலாய் பட்ருஷேவ் இரு நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை புது தில்லி வந்தாா்.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடா்பாக இந்தியா-ரஷியா இடையே உயா்நிலை அளவில் ஆலோசனை நடத்துவதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவலின் அழைப்பை ஏற்று பட்ருஷேவ் இந்தியா வந்துள்ளாா். அவா் பிரதமா் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோரைச் சந்திப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் தொடா்பாக பிரதமா் மோடியும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் கடந்த ஆக.24-ஆம் தேதி தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினா். அப்போது ஆப்கன் விவகாரத்தில் இணைந்து செயல்படுவது குறித்து இரு தலைவா்களும் விவாதித்தனா். அதன் தொடா்ச்சியாக பட்ருஷேவ் இந்தியா வந்துள்ளாா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான ரஷிய தூதா் நிகோலாய் குடஷேவ், ‘ஆப்கானிஸ்தானை பிற நாடுகளுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்பது இந்தியா - ரஷியாவின் பொதுவான கவலை’ என்று கடந்த திங்கள்கிழமை கூறியிருந்தாா்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றுவதற்கு முன்னா், ஆப்கன் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே அமைதிப் பேச்சுவாா்த்தையை ஊக்குவித்ததில் ரஷியா முக்கியப் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT