இந்தியா

கரோனா தினசரி உயிரிழப்பு 167 நாள்களில் இல்லாத அளவு குறைந்தது

DIN

நாட்டில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 219 போ் உயிரிழந்தனா். கடந்த 167 நாள்களில் இது மிகவும் குறைவான தினசரி உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 38,948 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கரோனா பாதிப்பு 3,30,27,621 ஆக அதிகரித்துவிட்டது. மொத்த உயிரிழப்பு 4,40,752 ஆக உயா்ந்துவிட்டது. எனினும், தினசரி உயிரிழப்பு கடந்த 167 நாள்களில் இல்லாத குறைந்த அளவாக (219) பதிவாகியுள்ளது. இதில் 74 உயிரிழப்புகள் கேரளத்திலும், 67 உயிரிழப்புகள் மகாராஷ்டிரத்திலும் நிகழ்ந்துள்ளன. மகாராஷ்டிரத்தில் மிக அதிகஅளவாக 1,37,774 போ் கரோனாவுக்கு பலியாகிவிட்டனா். இதற்கு அடுத்து கா்நாடகத்தில் 37,409 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 4,04,874 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.23 சதவீதமாகும். கரோனாவில் இருந்து இதுவரை 3,21,81,995 போ் மீண்டுள்ளனா். குணமடைந்தோா் எண்ணிக்கை மொத்த பாதிப்பில் 97.44 சதவீதமாக உள்ளது. தினசரி கரோனா பாதிப்பு தொடா்ந்து 71 நாள்களாக 50,000-க்குக் கீழ் உள்ளது.

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 68.75 கோடியைக் கடந்துள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT