ஹரியாணா கர்னால் மாவட்டத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.  
இந்தியா

ஹரியாணா கர்னால் மாவட்டத்தில் இணைய, எஸ்எம்எஸ் சேவை துண்டிப்பு

விவசாயிகளின் போராட்டத்தையடுத்து ஹரியாணா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் இணையம் மற்றும் எஸ்எம்எஸ் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

DIN

விவசாயிகளின் போராட்டத்தையடுத்து ஹரியாணா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் இணையம் மற்றும் எஸ்எம்எஸ் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 

ஹரியாணா தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மாதம் 28-ஆம் தேதி வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீஸாா் நடத்திய தடியடி நடத்தினர். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து கா்னாலில் உள்ள சிறிய தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். 

தொடர்ந்து இன்றும் விவசாயிகள் அப்பகுதியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதையடுத்து  கர்னால் மாவட்டத்தில் இணையம் மற்றும் எஸ்எம்எஸ் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. தவறான தகவல் பகிரப்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, கா்னாலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT