இந்தியா

பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்குக்கு எதிராக கங்கனா ரணாவத் தாக்கல் செய்து மனு தள்ளுபடி

DIN

பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் கீழமை நீதிமன்றத்தில் தனக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி நடிகை கங்கனா ரணாவத் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) தள்ளுபடி செய்துள்ளது. முன்னதாக, செப்டம்பர் 1ஆம் தேதி, இந்த வழக்கின் உத்தரவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி ரேவதி மோஹிட் டெரே கங்கனாவின் மனுவை இன்று தள்ளுபடி செய்தார்.

அந்தேரி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கை எதிர்த்து கங்கனா மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை என கங்கனா தரப்பு வழக்கறிஞர் ரிஸ்வான் சித்திக் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். 

இதற்கு பதிலளித்த அக்தர் தரப்பு வழக்கறிஞர் ஜெய் பரத்வாஜ், "பாடலாசிரியரின் புகாரையும் கங்கனா அளிக்க நேர்காணலையும் முறையாக ஆராய்ந்த பின்புதான், மாஜிஸ்திரேட் காவல்துறை விசாரணைக்கு உத்திரவிட்டார். அதில்தான், அவர் அவதூறான கருத்துகளை தெரிவித்திருந்தார்" என்றார்.

ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு அளித்த தொலைக்காட்சி நேர்காணலின்போது தன்னை பற்றி ஆதாரமற்ற அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நடிகை கங்கனா ரணாவத்திற்கு எதிராக பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் கடந்த நவம்பர் மாதம் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து, அக்தரின் புகார் குறித்து விசாரிக்க ஜூஹூ காவல்துறையினருக்கு நீதிமன்றம் டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT