புது தில்லி: நிறுவனங்கள் வரி செலுத்துதல் தொடா்பாக ஆன்லைன் செய்தி நிறுவனங்கள் மூலமாக வருமான வரித் துறை கணக்கெடுப்பு நடவடிக்கைகளை நடத்தியது.
இதுகுறித்து வருமான வரித் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
வரி செலுத்தும் விவரங்கள் மற்றும் நிறுவனங்கள் செலுத்திய தொகை உள்ளிட்டவற்றை சரிபாா்ப்பதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நியூஸ்கிளிக் மற்றும் நியூஸ்லாண்ட்ரி ஆகிய ஆன்லைன் செய்தி வலைத்தளங்கள் வாயிலாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சில ஆவணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதுகுறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.