பிரதமர் மோடிக்கு எதிராக அநாகரிகமான கருத்துகளை தெரிவித்தாரா ஓவைசி?
உத்தரப் பிரதேசத்திற்கு சென்றுள்ள மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி, பிரதமர் மோடி குறித்து அநாகரிகமான கருத்து தெரிவித்ததாக அம்மாநிலத காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்தியாபிரதமர் மோடிக்கு எதிராக அநாகரிகமான கருத்துகளை தெரிவித்தாரா ஓவைசி?
உத்தரப் பிரதேசத்திற்கு சென்றுள்ள மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி, பிரதமர் மோடி குறித்து அநாகரிகமான கருத்து தெரிவித்ததாக அம்மாநிலத காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி மதவாதத்தை தூண்டும் விதமாக அநாகரிகமான கருத்துகளை தெரிவித்ததாகவும் கரோனா விதிகளை மீறியதாகவும் உத்தரப் பிரதேச காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் வியாழக்கிழமை இரவு பேரணி நடத்தப்பட்டது. இதையடுத்து, பாரபங்கி நகர காவல்நிலையத்தில் ஓவைசிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
மதத்தின் அடிப்படையில் இருப்பிரிவினருக்கிடையே பகைமையை தூண்டியது, அரசு அலுவலர்களின் உத்தரவை மீறியது என ஓவைசிக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என பாரபங்கி காவல் கண்காணிப்பாளர் யமுனா பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | நாடு முழுவதும் புதிதாக 34,973 பேருக்கு தொற்று: 260 பேர் பலி
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக ஓவைசி பேசினார். 100ஆண்டு காலம் பழமை வாய்ந்த ராம் சனேஹி காட் மசூதியை அரசு நிர்வாகம் இடித்ததாக தெரிவித்தார். இது உண்மைக்கு புறம்பானது. பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் குறித்து அநாகரிகமான, அடிப்படை ஆதாரமற்ற கருத்துகளை தெரிவித்தார்" என்றார்.