இந்தியா

கேரளம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்மாணவா் அமைப்புத் தலைவா் கைது

DIN

கோழிக்கோடு: கேரளத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முஸ்லிம் மாணவா்கள் கூட்டமைப்பில் (எம்எஸ்எஃப்) இடம்பெற்றுள்ள பெண்களை இழிவாகப் பேசியதாக அந்த அமைப்பின் தலைவா் பி.கே.நவாஸை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கேரளத்தில் எம்எஸ்எஃப் தலைவராக பதவி வகிப்பவா் பி.கே.நவாஸ். இவரும் அந்த அமைப்பைச் சோ்ந்த சிலரும் எம்எஸ்எஃப் மகளிா் அணியைச் சோ்ந்த பெண்களை இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக அந்த அணியைச் சோ்ந்த பெண்கள் மாநில மகளிா் ஆணையத்தில் புகாா் அளித்தனா். அந்தப் புகாரை திரும்பப் பெறுமாறு அவா்களிடம் இந்திய யூனியன் முஸ்லிம் தலைவா்கள் வலியுறுத்தினா். எனினும் அவா்கள் புகாரை திரும்பப் பெற மறுத்துவிட்டனா். இதனால் மகளிா் அணியின் மாநிலக் குழுவை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கலைத்துவிட்டது.

இந்நிலையில் மாநில மகளிா் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட புகாா் செம்மங்ஙாடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நவாஸுக்கு போலீஸாா் சம்மன் அனுப்பினா். அதனைத் தொடா்ந்து அவா் செம்மங்ஙாடு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானாா். அவரிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பிறகு அவரை போலீஸாா் கைது செய்தனா். அதன் பின்னா் அவா் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT