இந்தியா

இந்திய, ஆஸ்திரேலியாவுக்கிடையேயான அமைச்சர்கள் நிலையிலான முதல் 2+2 பேச்சுவார்த்தை

DIN

இந்திய, ஆஸ்திரேலிய நாடுகளுக்கிடையேயான அமைச்சர்கள் நிலையிலான முதல் 2+2 பேச்சுவார்த்தை இன்று தில்லியில் நடைபெறவுள்ளது. இந்திய வெளியுறவித்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மாரிஸ் பெய்ன், பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் ஆகியோர் இன்று சந்தித்து பேசவுள்ளனர்.

7 லோக் மார்க் சாலையில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு மாலை 4:30 மணிக்கு செல்லும் மாரிஸ் பெய்ன், பீட்டர் டட்டன் ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.

அதிமுக்கியத்துவம் வாய்ந்த  2+2 பேச்சுவார்த்தை குறித்து உயர் மட்ட அலுவலர் ஒருவர் கூறுகையில், "ஆஸ்திரேலியாவுடன் 2+2 பேச்சுவார்த்தை தொடங்க முடிவெடுத்திருப்பது கடந்த சில ஆண்டுகளாக அந்நாட்டுடனான உறவில் ஏற்பட்டிருக்கும் மாறுதலை பிரதிபலிக்கிறது" என்றார்.

பெய்ன், தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியவுடன் 10:30 மணிக்கு ஹைதராபாத இல்லத்திற்கு சென்று ஜெய்சங்கரை சந்திக்கவுள்ளார். அதைத் தொடர்ந்து, ஜவஹர்லால் நேரு பவனில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொள்ளவுள்ளார். பொருளாதாரம், பாதுகாப்பு, சைபர், காலநிலை, முக்கியமான தொழில்நுட்பம் மற்றும் விநியோகச் சங்கிலிகள் குறித்து அமைச்சர்கள் பேசவுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT