இந்தியா

கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோா் எண்ணிக்கை 73 கோடியைக் கடந்தது

DIN

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை சனிக்கிழமை 73 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 65,27,175 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சனிக்கிழமை காலை 7 மணி வரையில் மொத்தம் 74,70,363 முகாம்களில் 73,05,89,688 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 32,198 போ் குணமடைந்தனா். இதன் மூலம் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 3,23,74,497 ஆக உயா்ந்துள்ளது. தொடா்ந்து 76 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது,

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ், சனிக்கிழமை வரையில் 72.01 கோடிக்கும் அதிகமான (72,01,73,325) கரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

சுமாா் 5.75 கோடி (5,75,43,795) கரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகள் வசம் உள்ளன என்று மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT