இந்தியா

குஜராத் முதல்வராகப் பதவியேற்றார் பூபேந்திர படேல்

DIN


குஜராத்தின் 17-வது முதல்வராக பூபேந்திர படேல் திங்கள்கிழமை பிற்பகல் பதவியேற்றுக்கொண்டார்.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தில் பூபேந்திர படேல் புதிய முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத்தைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். பதவியேற்பு விழா இன்று (திங்கள்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, மாநிலத்தின் 17-வது முதல்வராக பூபேந்திர படேல் திங்கள்கிழமை பிற்பகல் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பு விழாவில் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மனோகர் லால் கட்டர், சிவராஜ் சிங் சௌகான், பிரமோத் சாவந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பதவியேற்பு விழா முடிந்தவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியும் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுக்கு ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT