உ.பி.: அரசு பல்கலை. கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக் கழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் பகுதியில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக் கழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
395 கல்லூரிகளை உள்ளடக்கிய ராஜா மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக் கழகம் 92 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.
சுதந்திரப் போராட்ட வீரரும், சிறந்த கல்வியாளருமான ராஜா மகேந்திர பிரதாப் சிங் நினைவாகவும், பெருமைப்படுத்தும் வகையிலும் உத்தரப் பிரதேச அரசு சார்பில் அவரது பெயரில் பல்கலைக் கழகம் நடத்தப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இதனிடையே இப்பல்கலைக் கழகத்தின் புதிய கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உயர்கல்வித் துறை அமைச்சர், அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.