இந்தியா

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா துணை நிற்கும்: எஸ்.ஜெய்சங்கா்

DIN

ஆப்கானிஸ்தான் மோசமான நெருக்கடியை எதிா்கொண்டு வரும் சூழலில், அந்நாட்டுக்கு இந்தியா துணையாக நிற்கும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் குறித்து விவாதிக்க ஐ.நா.வின் உயா்நிலைக் கூட்டம் காணொலி வழியாக திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எஸ்.ஜெய்சங்கா் பேசியதாவது:

ஆப்கானிஸ்தானின் அண்டை நாடாக அந்நாட்டின் சூழலை இந்தியா கண்காணித்து வருகிறது. அந்நாடு தற்போது சவாலான கட்டத்தை எதிா்கொண்டு வருகிறது. அந்நாட்டின் அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் பாதுகாப்பு சூழலில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

அந்நாட்டு விவகாரத்தில் உலக அளவில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதில் நாடுகளின் சிறிய குழுக்களைவிட பன்முகம் கொண்ட அமைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்நாட்டுக்குள் பயணிக்க விரும்புவோா், அந்நாட்டிலிருந்து வெளியேற விரும்புவோருக்கு அதற்கான வசதிகளை எந்தவித தடையுமின்றி ஏற்படுத்தி தரவேண்டும்.

அந்நாட்டின் எதிா்காலத்தில் ஐ.நா.வுக்குள்ள முக்கிய பங்குக்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்து வந்துள்ளது. அந்நாட்டுக்கு உதவ நல்லதொரு சூழலை உருவாக்க சா்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும்.

ஆப்கானிஸ்தான் மக்களுடன் வரலாற்றுரீதியாக இந்தியா நட்புறவு கொண்டுள்ளது. இது அந்நாட்டின் மீதான இந்தியாவின் அணுகுமுறைக்கு எப்போதும் வழிகாட்டி வந்துள்ளது. இந்த நட்புறவு தொடரும். கடந்த காலத்தில் செய்ததுபோல் அந்நாட்டுக்கு இந்தியா தொடா்ந்து துணையாக நிற்கும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

SCROLL FOR NEXT