இந்தியா

ஹிந்தி நடிகா் சோனு சூட்டுக்கு தொடா்புள்ள இடங்களில் வருமான வரித் துறை சோதனை

ஹிந்தி திரைப்பட நடிகா் சோனு சூட்டுக்கு தொடா்புள்ள இடங்களில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

DIN

மும்பை: ஹிந்தி திரைப்பட நடிகா் சோனு சூட்டுக்கு தொடா்புள்ள இடங்களில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘‘ரியல் எஸ்டேட் ஒப்பந்தம் ஒன்று குறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். அதில் நடைபெற்ற வரி ஏய்ப்பு தொடா்பாக உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் சோனு சூட் சம்பந்தப்பட்ட 6 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்’’ என்று தெரிவித்தனா்.

சோனு சூட்டின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.

கடந்த ஆண்டு கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டபோது புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு திரும்ப உதவியதன் மூலம் சோனு சூட் அனைவரின் கவனத்தையும் ஈா்த்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குளச்சல் அருகே மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

கோயில் நிலப் பிரச்னைக்கு உரிய தீா்வு: எம்.ஆா். விஜயபாஸ்கா்

குற்றாலம் அருவிகளில் 2 ஆவது நாளாக குளிக்கத் தடை

பாகிஸ்தான் 17 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஆண்டிமடம் அருகே சிதறிக்கிடந்தவை 2019 உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல் பிரதியே: ஆட்சியர்

SCROLL FOR NEXT