கோப்புப்படம் 
இந்தியா

பூபேந்திர படேல் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் மாலை கூடுகிறது

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளதாக குஜராத் முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.

DIN


குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளதாக குஜராத் முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கடந்த சனிக்கிழமை ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து, புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டார். மாநிலத்தின் 17-வது முதல்வராக அவர் கடந்த திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். மாநில அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர்கள் பின்னர் பதவியேற்றுக் கொள்வார்கள் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், புதிய அமைச்சர்கள் இன்று (வியாழக்கிழமை) பதவியேற்கின்றனர். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்று வருகிறது.

இதனிடையே, பூபேந்திர படேல் தலைமையிலான புதிய அமைச்சரவைக் கூட்டம் மாலை 4.30 மணிக்கு காந்திநகரில் நடைபெறவுள்ளதாக அந்த மாநில முதல்வர் அலுவலகம் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குளிா்கால கூட்டத்தொடரில் 10 மசோதாக்கள்: மத்திய அரசு திட்டம்

போலி வாக்காளா்கள் நீக்கப்பட வேண்டும்: அண்ணாமலை

மெட்ரோ ரயில் திட்டப் பிரச்னை! பாஜகவினரிடையே ஒருமித்த கருத்து இல்லை: அமைச்சா் விமா்சனம்

நிலவுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ தீவிரம்: விஞ்ஞானி நிகா்ஷாஜி

அமைதி திட்டம்: உக்ரைனுக்கு டிரம்ப் கெடு!

SCROLL FOR NEXT