ஜார்க்கண்டில் விஸ்வகர்மா சிலையை கரைத்தபோது நீரில் மூழ்கி 7 பேர் பலி
ஜார்க்கண்டில் விஸ்வகர்மா சிலையை கரைத்தபோது நீரில் மூழ்கி சிறுமி உள்பட 7 பெண்கள் பலியானார்கள்.
ஜார்க்கண்டில் விஸ்வகர்மா சிலையை கரைத்தபோது நீரில் மூழ்கி சிறுமி உள்பட 7 பெண்கள் பலியானார்கள்.
ஜார்க்கண்டின் லத்தேர் மாவட்டம், பிக்ரு கிராமத்தில் உள்ள குளம் ஒன்றில் இன்று காலை விஸ்வகர்மா சிலையை கரைத்தபோது சிறுமி உள்பட 7 பெண்கள் நீரில் மூழ்கி இறந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக பாலுமத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி, ஜார்க்கண்ட் முதல்வர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.