உயிரிழந்த விமானிகள் 
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: இரு விமானிகள் பலி

ஜம்மு - காஷ்மீர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு விமானிகள் செவ்வாய்க்கிழமை பலியாகினர்.

DIN

ஜம்மு - காஷ்மீர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு விமானிகள் செவ்வாய்க்கிழமை பலியாகினர்.

பாட்னிடாப் என்ற பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் மேஜர் ரோஹித் குமார் மற்றும் மேஜர் அனுஜ் ராஜ்புட் ஆகிய இரு விமானிகளும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாரால் அவசரமாக தரையிறக்க விமானிகள் முயற்சித்துள்ளனர்.

ஆனால், மலைப் பகுதியில் தரையிறக்கியதால் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதிலிருந்த இரண்டு விமானிகளையும் படுகாயங்களுடன் மீட்ட அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், இரு விமானிகளும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நிலவரம்!

ஜக்தீப் தன்கர் எங்கே? அமித் ஷாவுக்கு சஞ்சய் ரௌத் கடிதம்

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் விபத்து: 2 போலீஸ் அதிகாரிகள் பலி

சென்னையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்வு

நடுவானில் தொழில்நுட்பக்கோளாறு - சென்னையில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT