கோப்புப்படம் 
இந்தியா

கோவேக்ஸின் போட்டுக் கொண்டாரா மோடி? அமெரிக்கா செல்ல அனுமதி கிடைத்தது எப்படி?

கோவேக்ஸின் தடுப்பூசி போட்டுக் கொண்டால் அமெரிக்காவுற்குள் நுழைய அனுமதி இல்லை என்ற நிலையில் மோடி அமெரிக்காவிற்கு சென்றுள்ளது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

கோவேக்ஸின் தடுப்பூசி போட்டுக் கொண்டால் அமெரிக்காவுற்குள் நுழைய அனுமதி இல்லை என்ற நிலையில் மோடி அமெரிக்காவிற்கு சென்றுள்ளது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்ஸின், ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசிகளை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

அதேவேளையில் அமெரிக்காவின் ஃபைஸா், ஜான்சன் & ஜான்சன், மாடா்னா, சீனாவின் சைனோஃபாா்ம், பிரிட்டனின் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த அனுமதியளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவேக்ஸின் தடுப்பூசிக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது.

இதனிடையே பிரதமர் மோடி கோவேக்ஸின் தடுப்பூசியின் இரண்டு தவணைகளை செலுத்திக் கொண்டதாக மத்திய அரசு செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக 4 நாள்கள் இன்று புறப்பட்டுச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அனுமதி எப்படி கிடைத்தது என்று தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெய்வ தரிசனம்... எம பயம், செய்த பாவம் நீங்கும் திருசக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர்!

ஒரே மாதத்தில் ரூ.6.25 கோடி அபராதம் வசூல்: தெற்கு ரயில்வே சாதனை!

விடியோ அழைப்பு மூலமாக டிஜிட்டல் அரெஸ்ட்! புது ஸ்டைலில் ஆன்லைன் பண மோசடி!

சொந்த மண்ணில் 3,211 நாள்களுக்குப் பிறகு சதம்: கே.எல்.ராகுல் புதிய சாதனை!

மியான்மரில் 2வது நாளாக இன்றும் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT