இந்தியா

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி

DIN

பிரதமர் நரேந்திர மோடி 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக சிறப்பு விமானம் மூலம் இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, செப்டம்பர் 23ஆம் தேதி தொழிலதிபர்களுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் ஹூக்-யையும் அவர் தனியே சந்தித்துப் பேசுகிறார். 

இதன்பின்னர் அன்றைய நாளே அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்துப் பேசுகிறார். 

இறுதியாக செப்டம்பர் 24 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நேரில் சந்தித்துப் பேசவிருக்கிறார். இரு தலைவர்களின் இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

இந்த சந்திப்பில் ஆப்கன் விவகாரம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் பேசப்படும் என்று தெரிகிறது. 

இதையடுத்து, ஜப்பான், ஆஸ்திரேலயா, பிரிட்டன் நாட்டுத் தலைவர்களையும் சந்தித்துப் பேசும் பிரதமர் மோடி, நான்கு நாடுகள் பங்கேற்கும் 'குவாட்' கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கிறார். 

பின்னர் 25 ஆம் தேதி நியூயார்க்கில் ஐ.நா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் இந்தியா திரும்புகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT