இந்தியா

கணவருக்கு 'ஐ லவ் யூ' குறுஞ்செய்தி; மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்த தில்லி பெண்

DIN

தில்லியில் கட்டடம் ஒன்றின் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்த 52 வயது பெண் உயிரிழந்தார். இதுகுறித்து தில்லி காவல்துறை, "முகர்ஜி நகரில் உள்ள நிரன்காரி காலனியில் வசிப்பவர் நேஹா வர்மா.

கணவர் தர்மா வர்மா வீட்டின் வளாகத்திற்குள் நுழைந்தபோது அவர் மாடியிலிருந்து குதித்துள்ளார். அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

நேஹாவும் அவரது கணவரும் அந்த வீட்டில்தான் வசித்துவருகின்றனர். அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். அவர்கள் இருவரும் அமெரிக்காவில் வாழ்ந்துவருகின்றனர். இந்த தம்பதியினர் விவாகரத்து கோரியுள்ளனர். குதிப்பதற்கு முன்பு, 'நான் உன்னை காதலிக்கிறேன்' என நேஹா கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்" என தெரிவித்துள்ளது.

நேஹா மொட்டை மாடியிலிருந்து குதிப்பது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சிசிடிவி, நேஹாவின் செல்போன் ஆகியவற்றை காவல்துறையினர் ஆராய்ந்துவருகின்றனர். அவரது மகன், மகள் தில்லி வந்த பிறகு, உடற்கூறாய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT