‘ஆளுநர்கள் மதம்பிடித்த யானை போல் செயல்படுகின்றனர்’: சிவசேவை விமரிசனம் 
இந்தியா

‘ஆளுநர்கள் மதம்பிடித்த யானை போல் செயல்படுகின்றனர்’: சிவசேனை விமரிசனம்

பாஜக ஆளும் மாநிலங்களில் அல்லாத ஆளுநர்கள் மதம் பிடித்த யானை போல் செயல்பட்டு ஜனநாயகத்தை நசுக்குவதாக சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் விமரிசித்துள்ளார்.

DIN

பாஜக ஆளும் மாநிலங்களில் அல்லாத ஆளுநர்கள் மதம் பிடித்த யானை போல் செயல்பட்டு ஜனநாயகத்தை நசுக்குவதாக சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் விமரிசித்துள்ளார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் அல்லாத ஆளுநர்கள் மத்திய அரசின் போக்குக்கு ஏற்ப மாநில அரசுகளை செயல்பட விடாமல் தடுத்து வருவதாக எதிர்க்கட்சிகள் நீண்ட நாள்களாக விமரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தின் சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ரெளத் ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து காட்டமாக விமரிசித்துள்ளார்.

சிவசேனை கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான சாமனாவில் மகாராஷ்டிர ஆளுநரின் பெயரைக் குறிப்பிடாமல் வெளியாகியுள்ள அவரது கட்டுரையில் மத்திய அரசு பாஜக ஆளாத மாநிலங்களை செயல்பட விடாமல் செய்வதற்கு ஆளுநர்களை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், “ஆளுநர்கள் மதம்கொண்ட யானை போல் செயல்படும் ஆளுநர்களின் பாகன்கள் தில்லியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அக்கட்டுரையில் இந்த யானைகள் ஜனநாயகம், சட்டம் மற்றும் அரசியல் கலாச்சாரங்களை தங்களது காலடியில் போட்டு மிதிப்பதாகவும் விமரிசித்துள்ளது.

மாநில அரசு முறையாக செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை எனவும் மாநில அரசைக் குலைப்பதற்கான அனைத்து சுதந்திரங்களும் மத்திய அரசால் ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் சிவசேனைக்கும், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவரும் நிலையில் சிவசேனையின் இந்த விமரிசனம் மேலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

ஒரு நாள் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை!

வெற்றி உரையில் நேருவை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

தீயவர் குலை நடுங்க வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT