முகப்பு
இந்தியா

இமாச்சல் - சாலை விபத்தில் 3 காவலர்கள் பலி

இமாச்சல் பிரதேச மாநிலத்தின் உனா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 காவலர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
இமாச்சல் - சாலை விபத்தில் 3 காவலர்கள் பலி
பகிர்:

இமாச்சல் பிரதேச மாநிலத்தின் உனா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 காவலர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

உனாவைச் சேர்ந்த ஆஷாபுரி பகுதியில் நேற்று (செப்-22) இரவு 10.30 மணி அளவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பணியில் இருந்த 3 காவலர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர்ஜித் சென்,’இறந்த 3 காவலர்களும் இரண்டு நாட்களுக்கு முன் தான் உனா பகுதியில் பணிக்கு சேர்ந்திருக்கிறார்கள். நேற்றிரவு 10.30 மணி அளவில் காவல் நிலையத்தின் அருகே பயங்கர சத்தத்துடன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 2 காவலர்கள் பலியானார்கள் . மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டார். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது’ எனத் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →