முகப்பு
இந்தியா

ஹிமாசலில் பயணிகள் ரயில் தடம்புரண்டது

ஹிமாசலில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

ஹிமாசலில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 

ஹிமாசலில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பரோக் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கற்கள் விழுந்து கிடந்தன.

இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக வந்த கல்கா-சிம்லா பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 

இந்த சம்பவத்தின்போது ரயிலில் 9 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் அவர்களில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹிமாசலில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →