முகப்பு
இந்தியா

பெங்களூருவில் குண்டு வெடித்து 3 பேர் பலி

பெங்களூருவில் இன்று மதியம் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். 4 பேர் காயமடைந்தனர்.

Updated On : 23 செப்டம்பர், 2021 at 2:54 PM
பெங்களூருவில் குண்டு வெடித்து 3 பேர் பலி
பகிர்:


பெங்களூரு: பெங்களூருவில் இன்று மதியம் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். 4 பேர் காயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு, பெங்களூருவில் உள்ள போக்குவரத்துத் துறையின் கிடங்குக்கு பக்கத்தில் இருந்த வாகனங்கள் பழுதுபார்க்கும் கடைக்கு அருகே நிகழ்ந்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் வாகனங்கள் பழுதுபார்க்கும் கடையில் இருந்த இரண்டு பேர் உள்பட மூவர் பலியாகினர். 4 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

குண்டுவெடிப்பில் பலியானோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சில ரசாயனக் கலவைகளால் இந்த விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பில் வெடித்த பொருள் பற்றி இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.